Saturday, January 17, 2009

கோடம்பாக்கம இஸ்கூல்.

ஐஐடியில் வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அறிமுகமான தொலைக்காட்சித் தொடர் தான் "Mind your Language". இங்கிலாந்தில் வாழும் சில வெளிநாட்டவர்கள் ஒரு பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார்கள். அப்பொழுது அவர்கள் அடிக்கும் கூத்து தான் தொடரே. முதல் தொகுப்பில் மொத்தம் 29 பாகங்கள், கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் வெளிவந்தது. youtubeல் முழுத் தொடரும் கிடைக்கிறது, முடிந்தால் பாருங்கள். நாலைந்து முறை பார்த்து விட்டேன், இன்னும் அலுக்கவில்லை, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். இதைத் தழுவி இந்தியில் வெளிவந்த தொடர் "Zabaan Sambhal Ke". இத்தொடரின் சில பாகங்களும் youtubeல் இருக்கிறது.

இதைத் தமிழில் எடுப்பதென்றால், ஈழம் அமைந்து அது நன்றாக முன்னேறிய பின்பு தான் எடுக்க முடியும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இதை இப்பொழுது விசய் டிவி "Kollywood Iskool" என்று தமிழில் வழங்குகின்றனர். தமிழ் கற்றுக்கொள்வதற்காக தமிழ் திரையுலகப் பிரபலங்கள் வரும் பள்ளி தான் கதை நடக்கும் இடம். லொள்ளு சபாவில் வரும் தலைகள் பலவற்றை இங்கு காண முடிகிறது. கதைக்கரு மட்டும் இல்லாது, பல நகைச்சுவைகளையும் சுட்டு உள்ளார்கள். என்ன இருந்தாலும், அசலுக்கு அருகில் கூட வரவில்லை.

1 comment:

Saptha said...

Good man. I see u have collected some facts too. An apt review for the TV show.
Keep it up
Regards
Saptharishi