சாந்தகுமார் பக்கங்கள்

Saturday, January 17, 2009

கோடம்பாக்கம இஸ்கூல்.

ஐஐடியில் வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அறிமுகமான தொலைக்காட்சித் தொடர் தான் "Mind your Language". இங்கிலாந்தில் வாழும் சில வெளிநாட்டவர்கள் ஒரு பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார்கள். அப்பொழுது அவர்கள் அடிக்கும் கூத்து தான் தொடரே. முதல் தொகுப்பில் மொத்தம் 29 பாகங்கள், கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் வெளிவந்தது. youtubeல் முழுத் தொடரும் கிடைக்கிறது, முடிந்தால் பாருங்கள். நாலைந்து முறை பார்த்து விட்டேன், இன்னும் அலுக்கவில்லை, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். இதைத் தழுவி இந்தியில் வெளிவந்த தொடர் "Zabaan Sambhal Ke". இத்தொடரின் சில பாகங்களும் youtubeல் இருக்கிறது.

இதைத் தமிழில் எடுப்பதென்றால், ஈழம் அமைந்து அது நன்றாக முன்னேறிய பின்பு தான் எடுக்க முடியும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இதை இப்பொழுது விசய் டிவி "Kollywood Iskool" என்று தமிழில் வழங்குகின்றனர். தமிழ் கற்றுக்கொள்வதற்காக தமிழ் திரையுலகப் பிரபலங்கள் வரும் பள்ளி தான் கதை நடக்கும் இடம். லொள்ளு சபாவில் வரும் தலைகள் பலவற்றை இங்கு காண முடிகிறது. கதைக்கரு மட்டும் இல்லாது, பல நகைச்சுவைகளையும் சுட்டு உள்ளார்கள். என்ன இருந்தாலும், அசலுக்கு அருகில் கூட வரவில்லை.

Thursday, March 13, 2008

மகளிர் தினமும், இன்றைய பெண்களின் நிலையும்.

மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன? பெண்களுக்கு மட்டும் ஏன் தனியாக ஒரு தினம் கொண்டாட வேண்டும்? பெண்களுக்கு ஒரு சமூக அந்தஷ்த்தை அளிக்கவும், அவர்களிடம் தன் மீது ஒரு நம்பிக்கை கொண்டு வரவும், தம் மீதான் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் பயன்படுத்த வேண்டிய அந்த நாளை, அதன் நோக்கங்களை மறந்து விட்டு, ஒரே மாதிரி பூவும், சேலையும் கட்டிக்கொண்டும், அடுத்தவர்களிடம் வாழ்த்துக்களை எதிர் பார்த்து கொண்டும் தான் கொண்டாடுகிறார்கள். பெண்கள் வளர்ச்சிக்காக எதாவது உறுதிமொழிகளை எடுத்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன், ஏமாற்றமே. தனக்கு சம அந்தஷ்த்து வேண்டும் என்ற நினைப்பு உள்ளவர்களும் இப்படியே தான் உள்ளனர். எப்பொழுது இவர்கள் கலர் கோழிகளாய் இருப்பதில் இருந்து மாறப்போகிறார்கள், அவர்கள் மாறும் வரை நசுக்கப்பட்டு கொண்டே தான் இருப்பார்கள். விரைவில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து,
மே.வ.சாந்தகுமார்.

பி.கு. சில விதிவலக்குகள் இருக்கலாம், பெரும்பாலான் இந்திய பெண்களின் நிலைமை இதுவே.

எனது கிறுக்கல்கள்

வைரமுத்துவின் சமகாலத்தில் வாழ்வதற்காகவே பெருமைப்பட்டு கொள்ளலாம். அவர் எழுத்தின் நினைவுகளோடு தூங்கிப்போக, காலையில் எழுந்தவுடன் கனவும் கவிதையாய் தோன்றியதாய் ஒரு நியாபகம். அந்த பிரமிப்பில் எழுதியது.

காற்றிலும் கீதம்
கேட்க வேண்டுமா?
கவிதை படி,
கனவும் கவிதையாய்
தோன்ற வேண்டுமா?
தமிழ் படி!!!!!!!!!!!!

குதிரையின் லகானைக் கழட்டி மற்றொரு பக்கத்தையும் பார் என்று வழிகாட்டியவர், அவருக்காக.

பெரியார் என்னும் சூறாவளி
இல்லாது இருந்திருந்தால்,
என் சிந்தினைச் செலவில்
கோட்டை கட்டி கொள்ளாமல்,
என் ஓலை குடிசையில்
இது தான் உலகம்
என்று இருந்திருப்பேன்.

அருந்ததி ராயின் "Ordinary man's guide to empire" என்ற நூலைத் தழுவி

கவனமாயிருங்கள்
உங்கள் சுதந்திரம்
அடுத்தவனால் அதிக
விலை கேட்பனுக்கு
விற்கப் படலாம்.

எப்படி தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்ததோ அதே போல் பெண்களுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது, அவர்களுக்காகவும் ஒரு சுய மரியாதை இயக்கம் வேண்டும்

பெண்களே
வெறும் கலர் கோழிகளாய்
இருக்காதீர், இல்லையேல்
என்றாவது ஒரு நாள்
நசுக்கப் படுவீர்கள்.

என் கவிதைகள் சிலருக்கு புரியாமல் போனதன் விளைவு

இது என் உலகம்,
என் உள்ள மொழிகளை
புரிந்து கொள்பவர்களுக்கு
மட்டுமே உள்ளே வர
அனுமதி உண்டு.


பேருந்தில் அவசரமாக ஒன்னுக்கு வரப்ப தோன்றியது
பயனத்தின் நீளம் விளங்க வேண்டுமா?
அவசரத்தின் எல்லையில் இருப்பவனைக் கேள்.

கவிதை வாசியுங்கள்
வாழப்பட்ட வாழ்க்கையின் மிச்சங்கள்
வெறும் நினைவுக் குட்டைகளே,
வாழப்படாத வாழ்க்கையை இரசிப்பதற்கேனும்
கவிதை வாசியுங்கள்.

வாழ்க்கையின் அவசரத்தில் தொலையாமல் இருக்க
என் ஆன்மாவின் சுவாசமாய் - கவிதைகள்.

இயற்கை அன்னையின் மடியில் மயங்காமல் புகைப்பட போதையில் என் நண்பர்கள் புதைந்து போனதை நினைத்து மனம் வெதும்பி எழுதியது
வருங்கால நினைவுகளுக்காக,
நிகழ்கால நிஜங்களைத்
தொலைக்காதீர்கள்.

Tuesday, August 21, 2007

ஐஐடி சென்னையில் ஒரு நள்ளிரவுப் பொழுது.

ஒவ்வொரு நாளும் பௌர்னமி ஆக இருந்திருந்தால் மனிதன் மின் விளக்கை கண்டுபிடுத்திருப்பானா என்று எனக்குள் ஒரு ஐயத்தை எற்படுத்திய அந்த நிலவொளி.அருவியின் சாரல் போன்ற மெல்லிய தூறல், சட்டை உறிஞ்சும் அளவுக்குக் கூட கணமில்லாமல். நம்மை இராஜாவாக நினைக்க வைக்கும் மரங்களின் பூக்களும் இலைகளும். சில்வண்டுகளின் சில்மிஷக் கொஞ்சல். என்னால் சுகம் தரமுடியாதா என கேக்கும் தென்றல். கைக்கெட்டும் தூரத்தில் மான்கள். இரம்யம், இந்த சொல்லுக்கு பொருள் உணர வைத்த பொழுது. தான் ஒரு கவிஞன் இல்லையே என வருத்தப்பட வைத்தது அந்த அந்தி நேரம்.

Thursday, May 3, 2007

தனிமையை விரும்புகிறேன்.

என்னடா எதோ தத்துவம் எழுதப் போறானு பாக்கறீங்களா அது எல்லாம் ஒன்னும் இல்லீங்க. வரவர கோபம் பயங்கரமா வருது. சும்மா சண்டை போட்டுக்கிட்டே இருக்கறதுக்கு சத்தம் போடாம தனியா இருக்கறது தான நல்லது அதனால தான்.

Tuesday, April 24, 2007

என்னங்க பையன் blog-க்கு ஏதோ அம்மணி பேரு வச்சிருக்கான்னு பாக்கறீங்களா. நான் என்னங்க பண்றது என்ன பேரு வைக்கலாமுனு யோசிச்சு யோசிச்சு நேரம் தான் வெட்டியா போச்சு, அதனால எனக்கு பொண்ணு பொறந்தா வக்கலாம்னு யோசிச்சு வச்சிருந்த பேர blog-க்கு வச்சுட்டன். பேரு நல்லா இருக்கா?